உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் திமுக குத்தாலம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்ச்சத்துடைய பொருட்களை வழங்கினார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் மற்றும் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர். இதேபோல செம்பனார்கோவிலிலும் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஸ்ரீ காட்டேரி அம்மனுக்கு தொன்றுதொட்டு திருவிழா நடைபெற்றது. முன்னதாக ஊர் பொதுமக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தனர். இத்திருவிழாவில் பென்னகர் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கடியாப்பட்டியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பணம் மற்றும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிதம்பராபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரமணாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரியில் 2019 – 2022 ம் ஆண்டு படித்து பட்டம் பெற்ற மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற மத்திய துணை தலைமை தொழிலாளர் ஆணையர் முத்து மாணிக்கம் பங்கேற்று, 517 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி கௌரவித்தார். இதில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூர் கிராமத்தில் தை பூசத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது. இதில் 600 காளைகளும், 300 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், சீறி பாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கபட்டன. இதனை காண பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.