உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்.. !!
மயிலாடுதுறை மாவட்டம் மகா காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பல்வேறு யாகங்கள் மற்றும் நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில் பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருகே நண்பனின் பிறந்தநாளையொட்டி பதாகைகளை கட்ட சென்ற லோகேஷ் மற்றும் தனுஷ்குமார் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசை கண்டித்தும், தேச ஒற்றுமையை நீடித்த அமைதியை பாதுகாக்க வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனர் கோசங்களை எழுப்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் ஏகாதேசி முன்னிட்டு பக்தோசிப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் சுவாமி தங்ககேடையத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கும் கௌதம் பேட்டை பகுதி சேர்ந்த சிவகுமார் என்பவருக்கும் இடையே இருந்த முன்பகை காரணமாக, நாராயாணணை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ஏழு பேரை கைது செய்து கிராமிய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ராஜேஷ் மற்றும் பசுபதி ஆகிய இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஆரணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று விபத்துக்களை ஏற்படுத்தியும், 3 இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காரை மடக்கி பிடித்து நரசிம்ம வேலு, மற்றும் பெருமாள் ஆகியோரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையில் காவல் நிலையத்தில் இருந்து, குற்றவாளிகள் தப்பி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் சத்யா மூவிஸ் நிறுவனமான மறைந்த ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையையொட்டி அவரது குடும்பத்தினர், புதுக்கோட்டையில் உள்ள மணிமண்டபத்திற்கு சென்று திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் ஆர்.எம் வீரப்பனின் வாழ்க்கை குறித்து குறும்படம் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து வல்லத்திரா கோட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.