உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!!
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாலை வசதி சரியில்லை விபத்து ஏற்படுகிறது என கூறி 30 வார்டு உறுப்பினர் புஷ்பலதா தங்கவேல் கை, கால் களில் கட்டு போட்டு சக்கர நாற்காலியில் மாமன்ற கூட்டத்திற்கு உள்ளே வந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மேயர் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என முதலில் தெரிவித்தார். எதிர்ப்பு தெரிவிக்க வெறும் கட்டு என தெரிந்த உடன் மேயர் தினேஷ்குமார் ஆத்திரமடைந்து நாடகம் நடத்தும் உறுப்பினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் மேயரை முற்றுகையிட்டு வாக்குவாதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், எளாவூரில் இந்தி எதிர்ப்பு உறுதி மொழியேற்ப்பினை திமுகவினருடன் ஏற்றுக்கொண்டார். பின்னர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேபோன்று சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆமூர், தச்சூர், கொள்ளுமேடு ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு உறுதிமொழியும், ஏழை எளியோருக்கு அன்னதானம் மற்றும் இனிப்பும் வழங்கப்பட்டது
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி சித்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எடப்பாடி அரசு மருத்துவமனைகளில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், சேலம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தங்கமோதிரம் வழங்கினார். அதோடு தமிழக அரசின் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதுகாப்பு பெட்டகம், சத்தான பழம் வகைகள் ஆகியவற்றையும் வழங்கினார்கள் இதில் பல்வேறு திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்..
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ்பெற்ற உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு திருமணத்தடை உள்ளவர்கள், நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை இந்த ஆலயத்தில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு கல்யாண சுந்தரேஸ்வரர் மற்றும் கோகிலாம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் ஆலய கொடி மரத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து மந்திரங்கள் ஓத யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதி செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா அடுத்த மாதம் 11ஆம் தேதியும் , தீர்த்தவாரி நிகழ்ச்சி 12 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அஞ்சலகத்தெருவை சோ்ந்த யோகேஷ் 25 ஆயிறம் மதிப்புள்ள போனை பிலிப்காா்ட் ஆன்லைன் மூலம் ஆா்டர் செய்து பணம் செலுத்தியுள்ளாா். இந்நிலையில் ஆர்டா் செய்த போன் ஞாயிற்றுகிழமை அன்று இகாம் கொரியா் மூலம் பாா்சல் சம்மந்தபட்டவருக்கு டெலிவரி செய்துள்ளனா். இதனிடையே கொரியரில் வந்த பாா்சலில் போனுக்கு பதிலாக சோப்பு ஒன்று இருந்துள்ளதை கண்டு அதிா்ச்சியடைந்தார் .இது குறித்து சம்மந்தப்பட்ட கொரியர் ஏஜன்ட்க்கு தகவல் கொடுக்க அவர்கள் விரைவில் போன் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..