உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திரப்பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத தொடர்ந்து மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவ ஞான பாலய சுவாமிகள், தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் சிறுபான்மை பிரிவு அமைச்சர் செஞ்சி மஸ்தான், திமுக ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதனிடையே தமிழகத்தில் முதன்முறையாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கில் பெண்களுக்கென்று சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பெண்களுக்கான பிரத்தியேக காட்சிகள் தொடர்ந்து திரையிடப்படும் என்று திரையரங்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட கைபேசி செயலி குறித்து மாணவிகள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அகிலாண்டேஸ்வரி சிகாகிரீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் இறுதியாண்டு மாணவிகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாமாண்டு மாணவிகள் பிரியாவிடை அளித்தனர். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவியர் என அனைவரும் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவாட்டம் வாணியம்பாடி அருகே கள்ள காதல் விவகாரத்தில் முகமது இர்பான் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ஹாஜிராவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.