தியான பூமி அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்ட யோகா தினம்..
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள தியான பூமி அறக்கட்டளை சார்பாக சர்வதேச யோகா தினம் தியான பூமி அறக்கட்டளையின் தலைவர் திருமூலர் சத்யா தலைமையில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாடினார்.
அப்போது அவர் கூறுகையில்
திருமூலர் உணர்த்துவது ஆன்மிகத்தை தானே தவிர பக்தியை அல்ல ஆன்மீகம் என்பது வரம்புகள் அற்றது எல்லைகள் அற்றது ஆனால் பக்திக்கு எல்லைகள் உண்டு இந்த உலகில் சண்டைகள் இல்லாத சச்சரவுகள் இல்லாத நிலையை அடைய முடியும் மனித உடம்பில் உள்ள ஐம்பொறிகளான கண் காது மூக்கு வாய் தலை போன்ற ஐம்பொறிகளை சரியாக பயன்படுத்துவோர் மட்டும்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்.
இந்த உலகில் பல மாய வலைகள் விரிக்கப்பட்டுள்ளது அதை நாம் சிக்கிக் கொண்டு இதுதான் உண்மை என நம் வாழ்க்கையை வீணடிக்கிறோம் அதனை சரிப்படுத்தும் முறை தான் ஆன்மீகம் இந்த உலகத்தில் அனைவரையும் கரைத்து விடுகிற ஒரே சக்தி அன்பு மட்டும்தான் இந்த உலகத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் பிரிவு பேதம் இல்லாமல் வேறுபாடுகள் இல்லாமல் மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்றால் அன்பு மட்டும் போதும்.
அந்த அன்பை செயலில் மூலம் வெளிப்படுத்தினால் வெற்றி காணலாம் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வதால் எந்த பயனும் இல்லை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் இந்திய ஆட்சிப் பணி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொல்லிக் கொள்வது ஒன்று மட்டும் தான் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் பணம் வேண்டும் புகழ் வேண்டும் என்று தேர்வு எழுதினால் தோற்றுப் போவீர்கள் எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணத்தில் தேர்வு எழுதினால் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
இறுதியாக அக்குபஞ்சர் மருத்துவ முறையில் நடைபெற்ற மருத்துவ முகாம் நிலை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-பவானி கார்த்திக்