திருமணத்தடை நீங்க இந்த அம்மனை வழிபட்டால் போதும்..!!
திருமணத்தடைகள் நீங்கி நல்ல கணவனை அடைய விரும்பும் பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
சிவனின் பாதியான சக்திக்கும், முருகப்பெருமானுக்கும் உரிய நாளாக இருக்கும் வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் திருமணதடை நீங்கும்..
இறைவனும், வழிபடுவதற்கென்று குறிப்பிட்ட விசேஷ நாட்கள் இருந்தாலும், விரத தினங்களான செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்து பூஜை செய்து வழிபட்டால் சிறந்தது.
அம்பிகை பாமாலை அன்றாட வழிபாடுகளைப் பற்றி குறிப்பிடும் போது மங்கல வெள்ளியில் விரதம் இருந்தால் மாபெரும் வெற்றியைக் காணலாம் என்று கூறுகிறது.
வெள்ளிக் கிழமையில் அம்பிகையை வழிபட்டால் குடும்பத்தில் இருக்கும் வேதனைகள் அகலும். வெற்றிகள் குவியும் என்கிறது. அம்பிகை என்பவள் சிவனின் பாதியாக இருப்பவள். அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்திய போது அபயம் அளித்து காப்பாற்றியவள் அம்பிகை.
சக்தி என்பது செயல்படுவது. மனிதனை செயல்படுத்த வைப்பது. அந்த செயலை செய்யும் வாழ்வை நல்ல விதமாக கடக்க அம்பிகையின் அருள் நிச்சயம் வேண்டும். வெள்ளிக்கிழமைகள் தான் அம்பாளை வழிபட ஏற்றது என்ற எண்ணம் சிலருக்கு உண்டு.
ஆனால் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் அம்பாள் வழிபாடு நற்பலனைக் கொடுக்கும். குடும்பத்தில் செல்வமும், ஆரோக்யமும் என்றும் நிலைத்திருக்க அம்பிகை அருள் புரிவாள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..