பொன்னேரியில் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்
மதிமுக சார்பில் கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்க குடியரசு தலைவரை வலியுறுத்தி பொன்னேரி அண்ணா சிலை அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தை பொன்னேரி எம்.எல்.ஏ துரைசந்திரசேகர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் நாட்டின் ஆளுநர் ரவியை நீக்குமாறு இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி கழகப் பொதுச் செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்களின் ஆணைக்கிணங்க மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கையெழுத்து இயக்கத்திற்கு மாவட்ட செயலாளரும் ஆட்சி மன்ற தலைவருமான நெமிளிச்சேரி மு.பாபு தலைமை வகித்தார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் மாவட்டத் தலைவருமான துரை சந்திரசேகர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
பின் கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்றுவதற்கான காரணங்கள் மற்றும் பி.ஜே.பி அரசின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், மணிப்பூர் கலவரம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. இதில்
மதிமுக தலைமை கழகப் பேச்சாளர் கனல் காசிநாதன், திருவள்ளூர் மாவட்ட அவைத் தலைவர் அட்கோ மணி, மாவட்ட பொருளாளர் பி.வி.தனஞ்செழியன், திருவள்ளூர் மாவட்ட துணைச்செயலாளர் விஜயராகவன், காங்கிரஸ் கட்சி மாநில துணைதலைவர் சதாசிவலிங்கம், நகரத்தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன், திமுக நகரச்செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், மதிமுக மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் தோட்டக்காடு மாசி, பொதுக்குழு உறுப்பினர் தேவதானம் வைகோதாசன், திருவள்ளூர் மாவட்ட பிரநிதி ஞாயிறு சிவலிங்கம், மதிமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆங்காடு சங்கர் உள்ளிட்ட மதிமுக வினர் கலந்து கொண்டனர்.
Discussion about this post