மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விவேகானந்தா கல்லூரி பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம் அருகே துவங்கிய பேரணியை விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் அனிதா கொடியைத்து துவக்கி வைத்தார். அப்பொழுது சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் வழங்கி மகிழ்ந்தனர்.
அதனை தொடர்ந்து பெண்களுக்கு சம உரிமை வழங்குவது, பாலியல் குற்றங்களிலிருந்து பெண்களை காப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும் சீர்காழி முக்கிய வீதிகள் வழியே மாணவிகள் பேரணியாக சென்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.