தமிழக முதலமைச்சருக்கு புதுவிதமாக நன்றி தெரிவித்த பெண்கள்..!!
தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் இன்று தொடங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெண்கள் வீடுகளில் கோலமிட்டு நன்றி தெரிவித்துள்ளனர்.
தேர்தல் வாக்குறுதியின் போது திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” என்ற பெயரில் செப்டம்பர் 15ம் தேதி வழங்கப்படும் என அறிக்கை விடுத்தது.
அதற்கான பணிகளும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுவென விண்ணப்ப படிவம் நிரப்பும் பணியும்.., அதை சரிபார்க்கும் பணியும் நடந்து முடிந்தது.., இதனை தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் “மு.க.ஸ்டாலின்” இன்று தொடங்கி வைத்துள்ளார். அதற்கான ஏடிஎம் கார்டுகளையும் வழங்கியுள்ளார்.
நேற்று இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக பல குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் நேற்றே 1000 ரூபாய் செலுத்தியுள்ளனர். இத்திட்டதிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு அளித்துள்ளனர்.
கோவை வெள்ளலூர் பகுதி காமராஜர் வீதியில் உள்ள வீடுகளில் குடும்ப தலைவிகள் கோலமிட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய பெண்கள், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி சமையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நேற்றே பலர் வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார்.
முதலமைச்சர் சொன்னதை செய்துள்ளார். மாதம் மாதம் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். காமராஜர் வீதியில் உள்ள வீடுகளில் கோலமிட்டு உரிமைத்தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
Discussion about this post