டெங்கு காய்ச்சல் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி..!!
டெங்கு பரவல் குறித்து கண்காணித்து வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் பெண்களுக்கான மாதவிடாய் குப்பி தொடர்பாக நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு பெண் பயனாளிகளுக்கு மாதவிடாய் குப்பியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் டெங்கு காய்ச்சல் கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம்.., ஆங்காங்கே கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
Discussion about this post