நிறைவடைந்த கருடன்..!! சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி சொன்னது..? படம் ரிலீஸ் தேதி..?
வெண்ணிலா கபடிகுழு என்ற திரைப்படத்தில் நகைச்சுவை கதாநாயகராக அறிமுகமானர். இத்திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல அமைந்த காட்சி ரசிகர்களின் பாரட்டை பெற்றதால் பரோட்டா சூரியாக மக்களிடம் அறியப்பட்டார். மேலும் இவர் நினைவிருக்கும் வரை, சங்கமம் போன்ற திரைப்படங்களில் யாரும் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
பல திரைப்படங்களில் புதுமையான கதாபாத்திரத்திரங்களை ஏற்று நடித்த பின்னரே நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் அங்கீகரிக்கப்பட்டார். இவரின் முதல் திரையுலக விருது 2013-ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றிபெற்றுள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ஆகும்.
பல முன்னனி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக இருந்த சூரி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் ஹீரோவகா அறிமுகமானர். இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
தயாரிப்பாளர் கே குமார் தயாரிப்பில் ஆர்.எஸ்.துறை செந்தில் இயக்கத்தில் வெற்றிமாறன் கதையில் உருவாகி வரும் திரைப்படம் கருடன். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் மைம் கோபி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து சென்னையில் இன்று இசை வெளியீட்டு விழா நடைப்பெற உள்ளது. இதில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
வெற்றிமாறன் இந்த படத்தின் கதை எழுதியவர் என்ற காரணத்தினால் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஏன் கலந்து கொள்கிறார்கள் என்ற குழப்பம் எழுந்த நிலையில் சூரிக்காக மட்டுமே கலந்து கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். இருவருமே சூரிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இந்த விழாவில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– பவானி கார்த்திக்