ஓராண்டை நிறைவு செய்த செந்தில் பாலாஜி..! வழக்கிற்கு விடியல் கிடைக்குமா..?
கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, 1 கோடியே 62 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறி கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் ஆகிய மூவரும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரில் பெயரில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நான்கு பேர் மீதும் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பினரும் சமரசமாக செல்ல வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்ததாக சொல்லப்படுகிறது.
உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தால் மட்டுமே சமரசம் ஏற்பட முடியும். சமரசம் ஏற்பட்டதால் பணம் கைமாறியது உறுதியாகிறது. அதனால், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை அடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூன் 14 ம் தேதி 2023ம் ஆண்டு செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
சட்டவிரோதமாக பணப் பரிமாற்ற பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லும் வழியில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின் செந்தில் பாலாஜியின் மனைவி கோரிக்கை வைத்த பின்னரே ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். காவேரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார்.
அதன் பின் அவர் உடல்நலம் தேறியபின் சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக கூறி ஜாமீன் மனு மறுக்கப்பட்டது.
அதன் பின் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இறுதியாக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டுத் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்போது அமைச்சராக இல்லாமல் சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தாலும், ஜாமீன் வழங்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தது.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி, அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன், அமலாக்கத்துறை ஆவணங்களை தனக்கு வழங்கும் வரை விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.
இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் அதில் இல்லை, என்பதால் குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களையும் உடனே சமர்ப்பிக்க வேண்டும் என அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இறுதியாக, 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முறையிட்டுள்ளார் 38- முறை கோரிக்கை வைத்த அண்மையில் நீதிமன்றம் உத்தவிட்டது..
அதன் மூலம் அவரது காவல் ஜூன் 14ம் தேதியான இன்று வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவரது காவல் நீட்டிக்கப்படுமா என்பது இன்று தெரிய வரும். கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கைதாகி இன்றோடு ஒரு வருடம் முடிகிறது.
கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் நீதிமன்ற விசாரணையில், இதுவரை ஜாமீன் கிடைக்காத நிலையிலும்,அமலாக்கத்துறை விசாரணை அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் மெதுவாகவே நகர்ந்து வருவதாக ஒரு சிலர் தெரிவித்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ