மீண்டும் மோடி வெற்றி பெறுவாரா..? ரஜினிகாந்த் சொன்ன பதில்..?
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார். கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வதற்காக இன்று சென்னையில் இருந்து இமயமலை புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எனது ஆன்மீக பயணம் என்பது என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. என்னுடைய முதல் இமயமலை பயணத்தின் போது புது வித
அனுபவம் கிடைத்ததால், ஒவ்வொரு வருடமும் நான் இமயமலைக்குச் செல்கிறேன்.
இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஆன்மீகம் விரும்பாதோர் யாரும் இல்லை. ஆன்மீகம் என்பது சாந்தி, சமாதானம், கடவுள் நம்பிக்கை என கூறினார்.
மேலும், ஆன்மீக பயணத்தால் புதிய இந்தியா பிறக்குமா..? என நமது செய்தியாளர் கேட்டதற்கு, புது இந்தியா பிறக்கும் நிச்சயம் வேண்டிக்கொள்கிறேன். என பதில் அளித்தார்.
மீண்டும் மோடி வெற்றி பெறுவரா..? என கேட்டதற்கு. அரசியல் தொடர்பான கேள்விகளை யாரும் கேட்க வேண்டாம். என கூறினார்.
இசை பெரிதா..? பாடல்வரிகள் பெரிதா..? என தமிழ் சினிமாவில் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதற்கு உங்கள் கருத்து என்னவென கேட்டதற்கு. பதில் சொல்ல ஒன்றும் இல்லை என கூறினார்.
மேலும், வேட்டையன் படத்தின் படபிடிப்பு குறித்த கேள்விக்கு, படம் சூப்பராக வந்துள்ளது” எனக் கூறி விமான நிலையம் கிளம்பிச் சென்றார்.
மேலும், ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, ஜூன் 3 அல்லது 4ஆம் தேதி சென்னை திரும்புவார் எனக் சொல்லப்படுகிறது.
ஏஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “வேட்டையன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதையடுத்து, ஓய்வுக்காகத் டுபாய் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷிற்கு இரண்டாவது திருமணம்..! கஸ்தூரி ராஜா பார்த்த அந்த பெண்..? இதையும் படிங்க
– லோகேஸ்வரி.வெ