மீண்டும் மீண்டுமா..? புதுசேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை எடுத்த முடிவு..!!
தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று அவர் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வந்த நிலையில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி, எல்.முருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
பின்னர் கட்சியில் இணைவதற்கான உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை அண்ணாமலை வழங்கினார்.
இதையடுத்து, தமிழிசை சௌந்தரராஜன் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்தார்..