கொடைக்கானலில் வனவிலங்குகள் உயிருக்கு அபாயம்..!! சமூக விரோதிகள் மீது நடவடிக்கை..!!
கொடைக்கானலில் உள்ள வனப்பகுதிக்குள் கொட்டும் குப்பைகளால் வனவிலங்குகள் உயிருக்கு அபாயம் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருக்கும் “கொடைக்கானல்” பலரின் பொழுதுபோக்கு தளமாகவும்.., சிலரின் சிறந்த சுற்றுலா தளமாகவும் உள்ளது. இப்படி பட்ட புனித தளத்தில் ஒரு சில சமூக விரோதிகள் விலங்குகள் மீது குப்பைகளை கொட்டி மற்றும் அந்த சாலை ஓர பகுதியில் குப்பைகள் கொட்டி சமூக சீர் கேடு விளைவிப்பதாக மாநகராட்சிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியை சுற்றி வனப்பகுதிகள் உள்ளன. கொடைக்கானல் நாயுடுபுரம் வில்பட்டி சாலையில் உள்ளது பிக்னிக் சோலை வனப்பகுதி . வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சோலைப்பகுதியில் சமூக விரோதிகள் குப்பை கழிவுகளை இந்த பகுதியில் கொட்டி வருகின்றனர்.
இதனால் இந்த பகுதியில் உள்ள நீரோடைகள் மாசுபடுவதுடன், வனவிலங்குகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வனப்பகுதிக்குள் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post