திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மழை இல்லாத காரணத்தினால் கொடைக்கானலில் உள்ள வனப் பகுதி மற்றும் தரிசு நிலங்கள் கடுமையான வறட்சியின் பிடியில் உள்ளது.
பெரும்பாலும் கொடைக்கானலில் வனப்பகுதியே உள்ளதால் வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது… இந்நிலையில் கோடைக்காலமும் துவங்க உள்ளதால் கொடைக்கானலில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வந்த நிலையில் கொடைக்கானல் அருகே உள்ள நகரக் காட்சி முனை பகுதியில் உள்ள பல நூறு ஏக்கரில் ஆன மரங்கள் மற்றும் செடிகள் எரிந்து நாசமாகின.
கொடைக்கானலில் இந்த ஆண்டில் இதுவரை ஏற்பட்டதில் இதுவே பெரிய காட்டுத் தீ ஆகும். மேலும் நள்ளிரவு துவங்கிய இந்த காட்டு தீ தற்போது வரை பற்றி எரிந்து வருகிறது.. தொடர்ந்து பற்றி எரிந்து வரும் காட்டு தீயினால் இந்தப் பகுதியில் உள்ள வனவிலங்குகள் வெளியேற துவங்கி உள்ளது.
இதுபோன்ற பெரிய அளவிலான காட்டுத் தீயை கட்டுப்படுத்த நவீன உபகரணங்கள் வேண்டுமென்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது.. தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை இல்லை என்றால் வறட்சியின் பிடியில் சிக்கி பல்வேறு இடங்களில் இது போன்ற காட்டு தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது. தற்போது நகர காட்சி முனை பகுதியில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.