கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படுவது ஏன்..? குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்தால் என்ன பலன்..?
கிருஷ்ணர் ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி அன்று நள்ளிரவு 12 மணிக்கு அவதரித்தார். அவர் அவதரித்த அந்த தினமே “கிருஷ்ண ஜெயந்தி” அல்லது “கோகுலாஷ்டமி” என கொண்டாடப்படுகிறது.
மேலும் அவர்களுக்குப் பிறந்த அனைத்து குழந்தை களையும் கொடூரமாக கொன்றான், 7-வது குழந்தையாக பலராமர், தேவகியின் வயிற்றில் கருவாகியிருந்தார். மகாவிஷ்ணு, மாயா தேவியை அழைத்து பலராமரின் கருவை, கோகுலத்தில் வசிக்கும் நந்த கோபரின் மனைவி ரோகிணியின் கருவுக்குள் மாற்றம் செய்ய கட்டளையிட்டார்.
மாயாதேவியையும், நந்தகோபரின் மனைவியுமான யசோதைவின் வயிற்றில் கருவாக வளரும்படி கூறினார். அதன்படியே ரோகிணியின் வயிற்றில் பலராமரின் கருவை மாற்றிய மாயாதேவி, யசோதையின் கருவில் வளர்ந்து வந்தாள்.
எட்டாவதாக தேவகியின் கருவில் கிருஷ்ணர் வளர்ந்து வந்தார். ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் கிருஷ்ணர் பிறந்தார். தங்களுக்கு பிறந்த குழந்தையை தேவகியும், வாசுதேவரும் கண்டு மகிழ்ந்தனர்.
அப்போது “மகாவிஷ்ணு” வடிவில் விஸ்வரூபம் எடுத்து நின்றார் கிருஷ்ணர். நீங்கள் இருவரும் சுதபா- பிருச்னி தம்பதியராக இருந்தபோது 12 தேவ ஆண்டுகள் என்னை நோக்கி தவம் செய்தீர்கள். அதன் பயனாக நான் உங்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என கேட்டேன்.
அதற்கு நீங்கள் பரமாத்மாவாகிய நான் உங்கள் குழந்தையாக பிறக்க வேண்டும் என கேட்க அதன்படி நான் உங்களுக்கு பிருச்னிகர்பா என்ற பெயரில் மகனாக பிறந்தேன். மறு பிறவியில் நீங்கள் காஷ்யபர்- அதிதி தம்பதியராக இருந்த போது உபேந்திரன் என்ற பெயரில் மகனானேன். இப்போது “கிருஷ்ணன்” என்ற பெயரில் பிறந்துள்ளேன். என சொன்னார்.
இனி உங்களுக்கு பிறப்பு கிடையாது, நீங்கள் வைகுண்டம் செல்ல வேண்டும், கம்சனிடம் இருந்து உங்களை விடுவிப்பதற்காக இதை செய்தேன். என்னை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விடுங்கள், அதற்கு பதிலாக அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து வளருங்கள் மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு மீண்டும் குழந்தையாக மாறி விட்டார்.
இந்த நாளையே நாம் “கிருஷ்ண ஜெயந்தியாக ” கொண்டாடுகிறோம். இந்த நாளில் வீட்டில் கிருஷ்ணர் சிலைக்கோ அல்லது அவரின் புகை படத்திற்கோ பூக்களால் அலங்கரித்து, பொட்டு வைத்து நைவேத்தியமாக வெண்ணெய், தட்டை, சீடை, முருக்கு, பால் கொழுக்கட்டை, இனிப்பு என செய்து படையல் இட்டு வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும்.
வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து அவர்களின் கால் அச்சை பச்சரிசி மாவில் வைத்து கால்தடம் வைத்து வழிபட்டால் கிருஷ்ணரே வீட்டிற்கு வருவதற்கு சமம் என பல ஆன்மீக ஐதீகத்தில் சொல்லுவார்கள்.
Discussion about this post