திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், இன்று (07-10-2022) அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.#DMK #CMMKStalin pic.twitter.com/b9hFSPdSpt
— DMK (@arivalayam) October 7, 2022
நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் தந்தை கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை செலுத்திவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் வேட்பு மனுத் தாக்கலை பார்வையிட வந்த எம்.பி. கனிமொழிக்கு அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர் செல்வம், காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மற்றும் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.