பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் 8 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் பேசுவதை வேடிக்கையாக எடுத்து கொள்ள கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஜனநாயக கட்சி நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பைடன், ரஷ்ய அதிபர் புதினின் அணு ஆயுத மிரட்டல் குறித்து பேசினார்.
மேலும் புதின் அணு ஆயுதங்களை உபயோகித்தால் உலகம் இறுதிப் போரை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 1962 ல் சோவியத் யூனியனால் ஏற்பட்ட கியூபா ஏவுகணை நெருக்கடிக்கு பிறகு தற்போது ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் நேரடியாக அணு ஆயுத மிரட்டல் வந்துள்ளது.
தற்போது இருக்கும் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுதங்களை உபயோகித்தால் உலகை அழிக்கும் இறுதிப் போரை உலகம் சந்திக்க நேரிடும் என்று பைடன் எச்சரித்துள்ளார்.