மயிலாடுதுறையின் காங்கிரஸ் வேட்பாளர் யார்..? நிவேதா முருகன் சொன்ன பதில்..!!
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே திமுக மற்றும் மதிமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர். முக்கியமாக இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரமும் ஆலோசனை கூட்டமும் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் இன்னமும் முடிவு செய்யப்படாத நிலையில்,
மயிலாடுதுறை மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்த திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய, திமுக ஆட்சியில் உள்ள பல சாதனைகளை மக்களிடையே எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அனைத்து நிர்வாகிகளுடம் ஆலோசனை நடத்திய பின்னரே மயிலாடுதுறையின் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் வெளியிடப்படும் என நிவேதா முருகன் தெரிவித்துள்ளார்.