யாரு சாமி இவன்…! ஒலித்த அபாய மணி..! பரபரப்பான ராஜபாளையம்..!
சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 10ம் தேதி அன்று சென்னையில் இருந்து புறப்பட்ட இந்த இரயில் நேற்று காலை 6.30 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இரயில் நிலையத்தை வந்தடைந்தது.
அங்கு இரண்டொரு நிமிடம் நின்ற ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி உள்ளார்கள். பயணிகள் இறங்கிய பின் புறப்பட்ட ரயில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் சென்றது.
அப்போது திடீரென அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால், என்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்து ரயிலை நிறுத்தினார்.
ரயில் நின்றதும் ஒரு பெட்டியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், இரயில் பெட்டியில் இருந்து கீழே குதித்து ஓடினார்.
இதனால் இரயில் பெட்டியில் பயணிகளிடம் திருடிவிட்டு, அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்திவிட்டு அந்த நபர் ஓடுவதாக வேகமாக தகவல் பரவியது.
இதனை அறிந்த இரயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிக்கு வந்து, பயணிகளிடம் விசாரித்தனர்.
அப்போது, ராஜபாளையத்தில் இறங்க வேண்டிய அந்த வாலிபர் தூங்கிக்கொண்டு இருந்ததாகவும், ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு இரயில் புறப்பட்டு சென்றபின் எழுந்த அந்த வாலிபர், இறங்க வேண்டும் என்ற அவசரத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து இரயிலை நிறுத்தியது தெரியவந்தது.
இதனால் கடுப்பான இரயில்வே அதிகாரிகள் யார் டா நீ என்ற அளவில் அந்த இளைஞர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இளைஞரின் இந்த செயலால் பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில் சுமார் அரை மணி நேரம் கால தாமதமாக புறப்பட்டது. மேலும் அந்த வழியாக செல்ல இருந்த மற்ற இரயில்களும் சற்று கால தாமதமாகவே வந்து சென்றன.
-பவானி கார்த்திக்