ADVERTISEMENT
பேருந்து தீ விபத்திற்கு இது தான் காரணமா..?
உத்தரபிரதேசம் மாநிலம் காசிப்பூரில் பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் காசிப்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால், பேருந்து தீ பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.