’ஜெயித்தாலும் தோற்றாலும் மீசைய முறுக்கு’.. 7 ஆண்டுகள் நிறைவு..!
மீசைய முறுக்கு:
நடிகர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து இசையமைத்த திரைப்படம் மீசையை முறுக்கு. கடந்த 2017ஆம் ஆண்டு வித்தியாசமான காதல் ஜானரில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பையும் விமர்சனத்தையும் பெற்றது.
நகரங்களில் மட்டும்தான் மீசைய முறுக்கு நல்ல வசூல் பெறும் என நினைத்த எண்ணத்தை முறியடித்து அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வசூலைப் பெற்று படம் ஹிட் அடித்தது.
சுந்தர் சி குஷ்பு தயாரித்த இந்த படத்தில் நடிகர் விவேக், ஆத்மிகா, விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஆதியின் சொந்தக் கதையைப் பின்னணியாகக் கொண்டு கொஞ்சம் கற்பனையையும் கலந்து கட்டி ஆதி இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
கதை சுருக்கம்:
மிடில் கிளாஸ் வீட்டுப் பையன் ஆதிக்கு ஒரு தம்பி, அம்மா, அப்பா என அழகான குடும்பம். கூச்சமும், பயந்த சுபாவமுமாய் திரியும் ஆதிக்கு இசை உயிர். அப்பாவின் நச்சரிப்புக்காகப் படித்தாலும், இசையில் சாதிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஓடுகிறார்.
இடையே ஹீரோயினுடன் காதலும், காதலால் பிரச்னையும் வருகிறது. கல்லூரி நண்பர்களுடனான ஜாலி மொமண்ட்ஸூம், சீனியர் மாணவர்களுடன் மோதலும், பாசமும் என இருக்கும் ஆதி தன் இலக்கில், காதலில் ஜெயித்தாரா இல்லையா… என்பதே ‘மீசைய முறுக்கு’ சொல்லும் கதை.

இந்த படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் நமது வாழ்க்கையோடு ஒத்து போகொம் அளவிற்கு எழுதியிருப்பார்.
ஜெயித்தாலும் தோற்றாலும் மீசைய முறுக்கு!’
நீங்கெல்லாம் சொந்தக்காரங்க கால்ல நிற்கிறீங்க. நான் சொந்தக் கால்ல நிற்கிறேன்’ என ஆதி பேசும் வசனம்,
‘கனவுக்காக சிலர் வாழ்க்கையைத் தொலைச்சிடுவாங்க. வாழ்க்கைக்காக சிலர் கனவைத் தொலைச்சிடுவாங்க. நான் என் கனவை விட்டுட்டு, வாழ்க்கையில ஜெயிச்சிருக்கேன்’ என விவேக் பேசும் வசனம்… இப்படிப் படம் முழுக்க அர்த்தமுள்ள வசனங்களை அடுக்கியிருக்கிறார் ஆதி.
வசனங்கள் மட்டும் தானா படத்தின் வெற்றிக்கு காரணம் இல்லை பாடல்களும் ஒரு வகை காரணம்..
வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா.
மீசையை முறுக்கு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
-பவானி கார்த்திக்