செந்தில் பாலாஜிக்கு எப்போதான் விடிவுகாலம் வரும்..? சென்னை ஹைகோர்ட் வைத்த ட்விஸ்ட்..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் வழக்கை சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றியதே முதல் தவறு, செந்தில் பாலாஜியின் அனைத்து வழக்குகளையும் சென்னை அமர்வு முதன்மை நீதி மன்றத்திற்கே மாற்ற உத்தரவிட்டுள்ளது.
ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்.., அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் இதற்கு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சட்ட விரோதமாக பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கதுறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
மக்கள் பிரதிநிதிகளின் மீதான வழக்குகளை விசாரிக்கும் பொழுது.., செந்தில் பாலாஜி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவரின் நீதிமன்ற காவல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜி தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை விசாரணை செய்ய முடியாததால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, முதன்மை அமர்வு நீதிமன்றம் செல்லுமாறு கூறினார்.
எனவே ஜாமீன் மனு கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, நீதிபதி அல்லியிடம் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேட்டு கொண்டார், இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் வழக்கை சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றியதே முதல் தவறு, செந்தில் பாலாஜியின் அனைத்து வழக்குகளையும் சென்னை அமர்வு முதன்மை நீதி மன்றத்திற்கே மாற்ற உத்தரவிட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..