உலகப்போர் நடக்கும் போது நான்.. பாட்டி சொன்ன அந்த கதை..!! ஊரும் உறவும்- 37
1. இரண்டாம் உலகப்போர் நடக்கும் போது பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு கால்நடையாகவே நடந்து வந்தேன்’ என்று வயதானவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
2. என் ஆச்சியின் தாய்மாமா இது மாதிரி வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.அது அப்போது எனக்கு ஒரு செய்தி மட்டுமே.
3. டி.எஸ் பசுபதி என்பவர் தன்னுடயை நடை அனுபவத்தை ‘பர்மாவிலிருந்து நடையாய் நடந்து’ என்று புத்தகமாக எழுதியிருக்கிறார்.அதை முன் வைத்து இதை எழுதுகிறேன்.
4. டி.எஸ் பசுபதி 1941 யில் தன்னுடைய மூத்த மகனை தந்தையிடம் விட்டு,மனைவியையும்,மிச்ச நான்கு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு பர்மா போகும் போது,அவர் தந்தை ”ஜாதகப்படி நீ உன் குடும்பத்தை அழைத்துப் போகத்தேவையில்லை அதனால் சிரமம் ஏற்படும் ”என்று எச்சரிக்கிறார்.
5. பசுபதி அதை அலட்சியப்படுத்தி குடும்பத்தையும் குழந்தைகளையும்,பர்மாவின் டவுஞ்சி(Taunggi)என்ற நகரத்திற்கு அழைத்துப் போகிறார்.
6. அஙகே போய் ஒருவருடத்தில், இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பர்மா மீது கடுமையான தாக்குதல்களை தொடுக்கிறது. ஜப்பான் டவுஞ்சி நகரை நெருங்கும் முன்னரே நிறைய மக்கள் கப்பல் வழியே நகரை விட்டு வெளியேறுகின்றனர்.நகரில் அடிக்கடி ஜப்பானின் விமானப்படைகள் குண்டுகளை வீச தொடங்கிவிட்டன.
7. பசுபதி உயர் அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்.அவருடைய மேலதிகாரி பசுபதியை ‘நீ மலேசியாவுக்கு கேப்டனாக போய்விடு’ உனக்கு நிறைய சம்பளம் தருகிறேன்.உன் குடும்பத்தை இந்தியாவுக்கு விமானம் மூலம் நானே அனுப்பி வைக்கிறேன்’ என்று கேட்கிறார்.அந்த வாய்ப்பை பசுபதி மறுக்கிறார்.மேலதிகாரி பலமுறை கெஞ்சுகிறார்.பின் விட்டுவிடுகிறார்.
8. பசுபதி தனக்கும் குடும்பத்திற்கும் இந்தியா போக விமான ஏற்பாடு வேண்டும் என்று கேட்கிறார்.இங்கே மேலதிகாரிக்கும் பசுபதிக்கும் நடுவே உள்ள இடைஅதிகாரி ஈகோ காரணமாக அந்த வாய்ப்பை பசுபதிக்கு தர மறுக்கிறார்.
9. டவுஞ்சி நகரை ஜப்பான் நேரடியாகவே தாக்க ஆரம்பித்துவிட்டது.
10. பசுபதி அலுவகம் மீதே குண்டுகளை போட அதிலிருந்து பசுபதி தப்பித்து வீட்டை நோக்கி ஒட ஒட அவர் பக்கம் வரை குண்டுகள் விழுந்து கொண்டே இருக்கின்றன.ஒடிப்போய் வீட்டைப் பார்த்தால் வீடு தரைமட்டமாக இருக்கின்றது.
11. பயத்தில் தேட, நல்லவேளையாக மனைவியும் நான்கு குழந்தைகளும் சாகவில்லை.கப்பலில் போகலாம் என்று பார்த்தால் கப்பல் போக்குவரத்தையே போரின் காரணமாக நிறுத்திவிட்டார்கள். நிச்சயமாக டவுஞ்சி நகரைவிட்டு வெளியேறியே ஆகவேண்டும்.ஜப்பான் ராணுவத்தினர் மிக நெருங்கி வந்துவிட்டார்கள் என்று தகவல்கள் கிடைத்தன.
12. மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு லாரிகளில் பின்பக்கம் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரம் அமைப்பில் ஏறிக்கொண்டு பிராயணம் செய்கிறார்.அதுவரை அவருக்கு பல இடங்களில் துணையாக நின்ற அவருடைய செல்ல நாய் கூட வருகிறது.வண்டியில் இடமில்லாததால் நாயை குண்டுகட்டாக தூக்கி கிழேப் போடுகிறார்.நாயை பின்னாலே ஒடிவந்து களைத்து நிற்க வண்டி போய் கொண்டே இருக்கிறது.
13. பசுபதியையும் அவர் குடும்பத்தினரையும் சுமந்து கொண்டு 12 மணி நேரம் பிராயாணம் செய்து மேகாங்கை அடைகிறது.பின் அங்கிருந்து ஒவ்வொரு நகரமாக ரங்கூன் செல்கின்றனர்.
14. வழியில் பசுபதியை சந்திக்கும் தயானந்த் என்ற நண்பன் ”இங்கிருந்து இனிமேல் இரண்டு வழியாக நடந்து போகலாம்.ரோட்டின் வழி போனால் நிச்சயம் ஜப்பான் ராணுவத்திடம் சிதையுண்டு அழிந்து போவீர்கள்.ஆகையால் காட்டின் வழியே தான் போகவேண்டும்.அதுவும் சீக்கிரம் போகவேண்டும்.இல்லாவிட்டால் பருவமழை தொடங்கிவிடும்.காட்டைக் கடந்து மலைகளையெல்லாம் ஏறி இறங்குவது,அதுவும் நான்கு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு ஏறி இறங்குவது என்பது மிக ஆபத்தானது ”என்று எச்சரிக்கிறார்.
15. பசுபதிக்கும் அவர் மனைவி பிச்சம்மாவும் அந்த பயணத்தை எதிர்கொள்ள தயாராகி காட்டிற்குள் செல்கின்றனர்.
16. காட்டில் போகும் போது புலியொன்று தாக்க,பசுபதி கூட்டத்தினருடன் வந்த ராவ் என்பவன் துப்பாக்கியை எடுத்து புலியை சுட்டு விரட்டுகிறான்.
17. காட்டில் நடக்க நடக்க நிறைமாத கட்டத்தில் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறக்கின்றது.சரியான மருத்துவ வசதி இல்லாததால் சில குழந்தைகள இறந்தும்.சில தாய்கள் இறக்கவும் செய்கின்றனர்.பசுபதியுடன் வந்த ஒரியப் பெண் பிரசவத்த இரண்டாம் நாள் இறக்கிறாள்.அவள் கணவன் ‘இந்தக்குழந்தைக்கு எப்படி பால் செய்துகொடுப்பேன்’ என்று அழுது கொண்டே இருக்கும் போதே அந்தக்குழந்தையும் இறக்கிறது.
18. பிரம்புகூடைகளை ஆதிவாசிகளிடம் இருந்து வாங்கி அதில் குழந்தைகளைப் போட்டுக்கொண்டு நடக்கின்றனர்.
19. உயரமான மலைச்சரிவுகளில் உயிரை பணயம் வைத்து தங்குகின்றனர்.ஏறி இறங்குகின்றனர்.
20. சில இடங்களில் ஒரு டின் தண்ணீரை ரூபாய் ஐம்பது கொடுத்து ( அந்த காலகட்டத்தில் சவரன் தங்கம் 45 ரூபாய்) வாங்கும் நிலமை வருகிறது.
21 பசுபதியிடம் பகதூர்,சந்தோஷ் என்ற இரு நேபாளி வாலிபர்கள் கூட்டத்தில் சேர்க்கச் சொல்லி கெஞ்சுகின்றனர்.பரிதாபப்பட்டு பசுபதி சேர்க்கிறார்.பின்னால் சந்தோஷ் பசுபதியின் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் செல்கிறான்.பகதூர் பிற்பாடு பணத்தை கொள்ளையடிக்க முயற்சிசெய்து பின் பிடிபட்டு அடிவாங்கிப் போகிறான்.
22. பசுபதிக்கு விமானச்சலுகையை மறுத்த இடையதிகாரியும் அகதியாக கால்நடையாக வருவதைப் பார்க்கிறார் பசுபதி.
23. பசுபதி அவசரத்திற்கு நெருப்பு கேட்டபோது கொடுக்க மாட்டேன் என்று எரிந்து விழுந்த நேபாளி, நடைப் பயணத்தில் தன் குடும்பத்தை இழந்து, அதை பசுபதியிடம் சொல்லி அழுகிறார்.
24. கொக்கைன் மாத்திரைகளும், பொட்டாசியம் பர்மாங்குனேட்களும் பசுபதி குடும்பத்தை பல இடக்களில் காப்பாற்றுகின்றன.
25 பல இடங்களைலில் பிணங்கள் மிதக்கும் குட்டைகளில் இருந்து நீர் எடுக்கின்றனர்.
26. ஒரு இடத்தில் ஆதிவாசியினர் உணவுக்கு பதிலாக பணத்தை மறுக்கிறார்கள்.ஆனால் நாணயங்களை விரும்புகிறார்கள்.காரணம் நாணயங்களை கோர்த்து கழுத்தில் போட்டு ரசிக்கிறார்கள்.பணம் என்பதற்கு மதிப்பே இல்லாமல்போய்விட்டது.அவர்களுடன் நடந்த நகைவியாபாரி ஒரு கைப்பிடி ரங்கூன் வைரத்தை கொடுத்து மாவு வாங்க முயற்சிக்கிறார்.
27. பசுபதி கூட்டத்தில் வரும் ராஜா என்ற நண்பர் குழந்தையுடன் மலையில் ஏறும் போது சறுக்கி குழந்தைக்கும் அவருக்கும் அடிபட்டு விடுகிறது.ராஜா பசுபதியைப் பார்த்து, ’என் மனைவியை அழைத்து முன்னால் செல்.நான் வந்து சேர்ந்து கொள்கிறேன்’ என்கிறார்.பின் பல மணி நேரம் கழித்து ராஜா மட்டும் தனியே வந்தார் .’குழந்தை எங்கே?” என்ற கேள்விக்கு குழந்தை இறந்துவிட்டது.விட்டு விட்டு வந்துவிட்டேன்’ என்கிறார்.
28. இரண்டு நாட்களில் பசுபதின் நான்கு வயது குழந்தை காய்ச்சல் கொண்டு இறந்துவிடுகிறது.
29. இன்னும் போகப் போக மிகச்சோர்வாகின்றனர்.பசுபதியிடம் ஒருபடி புழுத்த அரிசி மட்டுமே இருக்கின்றது.அதை குழந்தைகளுக்கு கொடுத்து சமாளித்து போகின்றனர்.வழியில் பல இடங்களில் அட்டைகள் வேறு ரத்தம் உறிஞ்சி துன்பம் கொடுத்தன.பசுபதியே சில சமயம் தன் பொறுமை குணத்தை விட்டு கோபத்தில் மனைவி குழந்தைகளை அடிப்பதும்.பின் தன் செயலுக்கு வெட்கமடைவதுமாய் மனசமநிலையை இழக்கிறார்.
30. ஒரு மலைச்சரிவில் ஏறும் போது அங்கே வெள்ளைக்காரர்கள் கூடாரத்தைப் பார்க்கிறார்கள்.உதவி கேட்கிறார் பசுபதி.அதில் ஒரு வெள்ளைககாரர் அன்று பசுபதி நடக்கும் இடத்திற்கு வந்து பால் டின்கள், அரிசி எல்லாம் குடுத்துவிட்டு, பசுபதியிடம் ஒரு அட்டையையும் கொடுக்கிறார்.” இதில் என் இங்கிலாந்து விலாசம் இருக்கிறது. ஒருவேளை நான் இறந்த செய்தி உனக்கு கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்திற்கு செய்தி சொல்லி விடு. அது கொஞ்சமாவது என் குடும்பத்தினருக்கு ஆறுதலாய் இருக்கும்” என்கிறார்.
இந்த கதையை இன்னும் தொடர்ந்து படிக்கனுமா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..
Discussion about this post