அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய கவலை வேண்டாம்..! இதோ எளிய டிப்ஸ்..!
சமைக்கும் நேரத்தில் சமைக்கும் பாத்திரம் அடி பிடித்துவிட்டதேனு கவலை கொள்ளாதீர்கள், இதோ சுத்தம் செய்ய எளிமையான டிப்ஸ்.
பால் சூடு செய்யும் சமையத்தில் பால் பாத்திரம், நாம் டீ போடும்போது அந்த பாத்திரம், கிளறிய சாதம் செய்யும் சமையத்தில் விழும் பாத்திரம் என அடிப்பிடித்த பாத்திரத்தை இனிமேல் கஷ்டப்பட்டு கடுமையாக தேய்க்க வேண்டாம். இதை பயன்படுத்தி பாருங்கள்.
அடிப்பிடித்த பாத்திரத்தில் அடிபிடித்த இடத்தை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நிரப்ப வேண்டும். அந்த தண்ணீரில் 1/2 டீஸ்பூன் பேங்கிங் சோடா, 2 ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்து, அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு செய்ய வேண்டும்.
அந்த பாத்திரத்தில் உள்ள நீர் கொஞ்சம் சூடானதும் 1 ஸ்பூன் பாத்திரம் தேய்க்க வைத்திருக்கும் லிக்யூடை ஊற்ற வேண்டும். பின் ஒரு கரண்டியை பயன்படுத்தி பாத்திரத்தில் அடிப்பிடித்த இடங்களை சுரண்டி விடவும்.
பிறகு பாத்திரத்தில் உள்ள நீரானது பால் போல் நன்றாக பொங்கி வரும். நீங்கள் தொடர்ந்து கரண்டியால் சுரண்டி விடனும். பிறகு அடுப்பை அணைத்து , பாத்திரத்தில் உள்ள நீரை கீழே ஊற்றி விடலாம்.
பின் பாத்திரம் சூடாக இருக்கும் அதனால் பாத்திரத்தை ஒரு துணியால் பிடித்துக், பாத்திரம் தேய்க்கும் கம்பி நார் ஸ்க்ரப் பயன்படுத்தி அடிபிடித்த பகுதியில் லேசாக தேய்க்கும் போதும் அந்த கறைகள் நீங்கி விடும். பின் பாத்திரத்தை கழுவினால், பாத்திரம் நல்லா பளிச்சென்று புதுசு போல இருக்கும்.
உங்க வீட்டுலயும் இப்படி ஆச்சினா இப்படி செய்யுங்க, இது உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.