சில்க் ஸ்மிதா படப்பிடிப்பு என்றாலே….அது நடக்கும்.. மைக் மோகன் பேட்டி…!
சில்க் ஷ்மிதா:
ஒப்பனைக் கலைஞராக திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கிய சில்க் ஸ்மிதா தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தி மூலம் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகமானர்.
அதில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. 80 களின் கனவு கன்னியான இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி,கமல் போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தற்போது இல்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டுத்தான் இருகிறார்.
மைக் மோகன்:
கமல்ஹாசன் மூலம் கோகிலா என்ற திரைப்படத்தில் அறிமுகமானர். 80களின் வெள்ளி விழா நாயகனான மோகன் நடிப்பில் கிட்டத்தட்ட வெளிவந்த எல்லாம் படங்களும் ஹிட் ஆனது.
இவரின் விதி, நூறாவது நாள், ரெட்டை வால் குருவி மற்றும் சகாதேவன் மகாதேவன் போன்ற வெற்றிப் படங்களில் உச்சத்தை அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.
அதன்பின் சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்போது மீண்டும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது ரீ என்ரியை கொடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து இவர் ஹரா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமிபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மைக் மோகன் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.
பேட்டியில் கூறியதாவது:
சில்க் ஸ்மிதா படங்களில் வேண்டுமென்றால் கிளாமராக நடித்திருக்கலாம். ஆனால் நிஜத்தில் மிகவும் நல்லவர். எனக்கு அவரை நன்றாகவே தெரியும், நான் அவருடைய நடிப்பு மற்றும் அவருடைய கேரக்டரை பார்த்து வியந்து போய் நின்று இருக்கிறேன்.
சில்க் ஸ்மிதா படப்பிடிப்பு என்றாலே அதனை காண்பதற்கு ரசிகர்களை தாண்டி தயாரிப்பாளர்கள், பைனான்ஸியர்கள் என பலர் வந்து காத்துக் கொண்டிருப்பது கண்டிப்பாக நடக்கும்.
ஆனால் எந்த இடத்திலும் சில்க் ஸ்மிதா அலட்டிக்கவே மாட்டார் ரொம்ப சாதாரணமா பழகுவாங்க.சூட்டிங் ஸ்பாட்டில் கூட அங்கு இருக்கிற எல்லாரிடமும் சகஜமா பழகுவாங்க.
ரொம்ப கஷ்டபட்டு மேல வந்த பொண்ணு. அவருடைய இழப்பு எங்க எல்லாருக்குமே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.எனக்கும் அவங்க இல்லை என்பதை இப்பவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மோகன் பேட்டியில் கூறியுள்ளார்.
-பவானிகார்த்திக்