இது என்ன புது டிவிஸ்ட்டா இருக்கு..? கோவில் அன்னதானம் தரணும்னா சான்றிதழ் வாங்கணுமா..?
பெருமாநல்லூரில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோயில் வாசலில் அக்கோயிலின் செயல் அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் வைக்கப்பட்டுள்ள பதாகை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
சர்க்கரை தடவிய விஷத்தைப் போல பக்தர்களுக்கு அன்பான அறிவிப்பு என்ற பெயரில் பக்தர்களின் பக்தியை புண்படுத்தும் நோக்கோடு இந்த பதாகை வைக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் வெளியில் அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் ( Food Safety and Standards Authority of India ) சான்றிதழ் பெற்றால் மட்டுமே அன்னதானம் செய்ய முடியும் என்கிறார்கள்.
செயல் அலுவலர்கள் அவர்களே இந்துக்களாக பிறந்தது அவ்வளவு பெரிய பாவமா..?? நாங்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து பின் தான் பக்தர்களுக்கு அன்னதானமாக கொடுப்போம்.
ஆனால் உங்களின் கூற்றுப்படி #fssai சான்றிதழ் இருந்தால் மட்டுமே அன்னதானம் கொடுக்க முடியும்.
நாங்கள் இறைவனுக்கு படைப்பதற்காக தயார் செய்யும் உணவை சுவை கூட பார்க்காமல் செய்ய காரணம் முதலில் இறைவனுக்கு படைக்க வேண்டும் என்பதற்காகவே. உங்களின் ஆணை எங்கள் நம்பிக்கையை சிதைக்கும் என்பதை நீங்கள் உணரவில்லையா..??? இல்லை உணர்ந்து உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதா..???
தமிழக அரசே, என் கோவில் தெய்வத்திற்கு பொங்கலிட்டு அன்னதானம் தர யார் நீங்கள் அனுமதி தர. இதேபோன்று மற்ற மதத்தினர் வழிபாட்டு தளத்தில் பதாகை வைக்க தைரியம் உண்டா என்று பக்தர்கள் இப்பொழுதே பேசத் தொடங்கி விட்டார்கள். இது தான் நீங்கள் எதிர் பார்த்ததா..??
அரசியல் கட்சி அன்னதானம் என்ற பெயரில் நடத்துகிறார்களே அங்கே இதுநாள் வரை சொன்னதுண்டா..? இந்து மத நம்பிக்கையை புண்படுத்துவதாக இனியும் நடந்தால், பக்தர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இந்த அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற்று இந்த பதாகையும் உடனடியாக அப்புறப்படுத்துமாறு அருள்மிகு கொண்டத்து காளியம்மன் பெயரில் உத்தரவிடுகிறோம். உத்தரவை உதாசீனப் படுத்தினால் சட்ட ரீதியாகவும் எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளோம்.
Discussion about this post