வேப்பிலை அம்மன் உருவான கதை..? வேப்பஞ்சேலை நேர்த்திகடனாக கொடுப்பது ஏன்..?
பொதுவாகவே பலரின் வீட்டில் வேப்பிலை மரம் வைத்து இருப்பார்கள்.., வேப்பிலையை வீட்டு வாசப்படியில் கட்டுவது ஏன்.., கோவில்களில் நேர்த்திகடனாக வேப்பஞ்சேலை கொடுப்பது ஏன் என இந்த தகவலில் பார்க்கலாம்.
முன்னூரு காலத்திற்கு முன் ரேணுகா என்ற பெண் வாழ்ந்து வந்தார் அப்பொழுது அவருக்கு நான்கு மகன்கள்.., ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மகன்களுக்குள் திடிரென சொத்து தகராறு பிரச்சனை ஏற்படும்.
அப்பொழுது கடைசி மகன் கருடன் அண்ணகளால் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுவார். மனமுடைந்த ரேணுகாவின் கணவர் இதை பார்த்து இறந்து விடுவார், அப்போது கணவரின் உடல் தீயில் எறிந்து கொண்டு இருக்கும் பொழுது, ரேணுகா உடன் கட்டை ஏறிவிடுவார். ஆனால் மழை வந்து அந்த நெருப்பை அணைத்து விடும்.
நெருப்பில் துணி பொசிந்து விட மேலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டு விடும், இந்த காயங்களுடன் ஊருக்குள் செல்ல விருப்பமில்லாத ரேணுகா காட்டிற்குள் செல்லுவார்.., ஆடைகள் கிழிந்து இருபதால் வேப்பிலையை ஆடையாக உடுத்தியுள்ளார்.
சிவபெருமானின் தீவிர பக்தராக ரேணுகா இருந்துள்ளார், சிவபெருமானுக்கு பூஜை செய்வதை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை.., ரேனுகாவிற்கு ஒரு நாள் பசி அதிகமாக காட்டில் எதுவும் கிடைக்காததால் காட்டின் மேல் உள்ள மலைவாழ் மகளிடம் சென்று பசி என கேட்டுள்ளார்.
அப்பொழுது அந்த மக்கள்.., ரேணுகாவை பார்த்து. அம்மா நீங்கள் தெய்வீக முகத்தோடு இருகின்றீர்கள் எங்களிடம் இருக்கும் உணவை நாங்கள் எப்படி தருவது.., இருந்தும் இந்த ஏழையின் குடிசை தேடி நீங்கள் வந்து இருபது சந்தோசம், நாங்கள் எச்சில் இடாத வெள்ளம் மாவு மற்றும் கூழ், நொய் அரிசியில் பிடிக்கப்பட்ட உருண்டை சோறு மற்றும் மாவுருண்டை சாப்பிடுங்கள் என கொடுத்துள்ளனர்.
ரேணுகாவிற்கு ஒன்றும் புரியவில்லை.., குழப்பத்தில் சிவனுக்கு பூஜை செய்துள்ளார்.., அப்பொழுது தோன்றிய சிவபெருமான்..,
ரேணுகா இன்று முதல் நீ முத்து மாரியாக மக்களுக்கு காட்சி அளிக்க போகிறாய், எப்படி இந்த வேப்பஞ்சேலை அணிந்து உன் உடலில் உள்ள முத்துகள் மற்றும் காயங்கள் குணமானதோ அதை போல் மற்றவருக்கும் நீ குணமாக்குவாய், நீ சாப்பிடும் இந்த உணவையே உனக்கு மக்கள் நைவைத்தியமாக படைப்பார்கள் என கூறினார்.
வேப்பஞ்சேலைக்குள் இருக்கும் வேப்பிலை அம்மன் தான் முத்து மாரியம்மன், முத்து மாரியம்மனுக்கு மட்டுமின்றி அனைத்து அம்மன்களுக்கும் வேப்பிலை மிகவும் பிடிக்கும்,
தீராத நோயாள் அவதி படுபவர்கள், வேப்பஞ்சேலை தருகிறோம் என அம்மனிடன் வேண்டிகொண்டால் அவை சீக்கிரமே குணமாகி விடும்.
வேப்பிலை வீட்டின் வாசப்படியில் கட்டினால் எந்த விதமான காத்து கருப்புகளும் வீட்டின் உள் நுழையாது.., முக்கியமாக ஒரு தண்ணீரில் மஞ்சளை கலக்கி அதில் வேப்பிலையை போட்டு தெளிக்க வேண்டும். இந்த வாசனை வீட்டில் இருந்தால் எந்த விதமான நோயும் வீட்டின் உள் இருக்காது.
Discussion about this post