என்னடா இது அட்லீக்கு வந்த சோதனை..!!
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் “அட்லி”. தற்போது ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான படம் “ஜவான்”
கடந்த செப்டம்பர் 7ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் திரையரங்குகளில் வெளியானது.
ஜவான் படம் பரபரப்பாக இயங்கும் ஒரு நகரத்தில் மெட்ரோ ரயிலை ஷாருக் சில பெண்களுடன் ஹைஜேக் செய்து வைத்து, அதில் இருக்கும் பயணிகளை விடுவிக்க 40 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.
அந்த பணம் எதற்கு..? யாருக்காக அதை செய்கிறார்..? அந்த கடத்தலில் ஈடுபடும் பெண்கள் யார்..? அவர்களின் பின்னணி என்ன? ஷாருக்கானின் கடத்தல் எங்கு சென்று முடிகிறது என்பதே ஜவான் படத்தின் கதை.
“ஜவான்” திரைப்படம் முதல் நாளே ஹிந்தி திரை உலகில், 129.6 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இதுவரை உலகளவில் 250 கோடி வசூல் செய்துள்ளது என்பது பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
ஜவான் ஒரிஜினல் தமிழ் வெர்ஷன் – 1989. pic.twitter.com/G0KD0u7Qb0
— மாடர்ன் திராவிடன் (@moderndravidan) September 7, 2023
அட்லி படம் என்றாலே அது காப்பியடிக்க பட்ட படம் என நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்குவார்கள். அந்த வகையில் ஜவான் படம் 1989ல் வெளியான சத்யராஜின் “தாய் நாடு” படத்தை மாற்றி அமைத்து எடுக்கப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் அட்லீயை வைத்து கலாய்த்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..