சிறப்பாக செயல்படும் விஜய் மக்கள் இயக்கம் – இனி 234 தொகுதியிலும் இரவு பாட சாலை திட்டம்..!!
தமிழ் திரை உலகில் முன்னனி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய். நடிகர் விஜய், “விஜய் மக்கள் இயக்கம்” ஒன்றை நடத்தி வருகிறார், அதன் மூலம் ஏழை மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை.., விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவி களுக்கு சான்றிதழ் மற்றும் சால்வை அணிவித்து.., ஊக்க தொகை கொடுத்து அவர்களை கவுரவித்தார்.
இதனை தொடர்ந்து ஏழை பள்ளி மாணவர்களுக்கு இரவு நேரத்தில் கல்வி கற்பிக்க இரவு பாட சாலை திட்டம் ஒன்றை காமராஜர் பிறந்த நாளான இன்று தொடங்கியுள்ளார். அந்த இரவு நேர பாட சாலை திட்டத்திற்கு “தளபதி விஜய் பயிலகம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் விஜய் பாடசாலை திட்டம் ஆரமிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காமராஜர் பிறந்தநாளான இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்ய வேண்டும்.., மேலும் அந்த பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் மற்றும் பேனா பென்சில்கள் வழங்கி உதவிகளை செய்ய வேண்டும் எனவும்.., விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து தளபதி விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் என்.ஆனந்த் கூறுவது.., “தளபதி அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இன்று பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். மேலும் மாணவர்களுக்கு இலவச நோட்டு, பேனா போன்றவற்றை வழங்கியுள்னர்.
அது மட்டுமின்றி ஒரு சில பகுதிகளில் இரத்த தான முகாமும் நடத்தி வருகின்றனர். மேலும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளன்று அவரை போற்றும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் “விஜய் மக்கள் இயக்கம்” ஆரம்பிக்கப்படும் எனவும்.. கூறினார்.