விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கி பறிமுதல்..! பரபரப்பில் பேரணாம்பட்டு..!
பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கி பறிமுதல்- ஒருவர் கைது போலீசார் விசாரணை.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலைக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் மாந்தோப்பு கொத்தப்பல்லி கிராமத்தில் உள்ளது. இந்த மாந்தோப்பில் கொத்தப்பல்லி கிராமத்தை சேர்ந்த ரகுபதி ( வயது 35) என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்த மாந்தோப்பில் உள்ள குடிசை வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் இருப்பதாக பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கொடுக்கப் பட்டுள்ளது. தகவலின் பெயரில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் விரைந்து சென்று சோதனையிட்டனர்.
அதில் இரண்டு நாட்டு துப்பாக்கி களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். காவலாளி ரகுபதியை கைது செய்த பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய நிலத்தில் நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post