“பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு…!
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், வெயிலின் தாக்கத்தால் குளம், குட்டைகளில் உள்ள நீர் வற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பறவைகளும், விலங்குகளும் பாதிக்கப்படுவதை குறிப்பிட்டு கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு, நீரும் உணவும் கொடையளிப்போம் என தெரிவித்துள்ளார்.