பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து அவரது மகனான இளவரசர் சார்லஸ், மன்னராக பதவியேற்றுள்ளார். எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்கு வரும் திங்கள்கிழமை நடக்கவுள்ள சூழலில், அவரை உடலை பார்க்க இரவும் பகலும் ஆயிரக்காண மக்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் மன்னர் சார்லஸ் முக்கிய நிகழ்வுகளில் பங்கெற்று வருகிறார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பதவியேற்ற நிலையில் அனைத்து மதங்களையும் பாதுகாப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
அதை உறுதிபடுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை பக்கிங்காம் அரண்மனையில் அனைத்து மதத் தலைவர்களையும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் பேசும்போது கிறிஸ்தவம் மட்டுமல்ல, எல்லா மதங்களையும் பாதுகாப்பேன். அனைத்து மத நம்பிக்கைகளையும் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன் என உறுதி அளித்தார்.
மதங்கள், கலாசாரங்கள் மற்றும் நம்பிக்கைகளைப் பாதுகாப்பதன் மூலம் நமது நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கபடும் என தெரிவித்தார். நமது நாட்டின் பன்முகத்தன்மை நம் நாட்டின் சட்டங்களில் மட்டும் இடம் பெற்றால் அகாது அதை நாம் கடைபிடிக்க வேண்டும் என்றார். அரசனாக, அனைத்து சமூகங்களுக்காகவும், அனைத்து நம்பிக்கைகளையும் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நான் உறுதியாக இருப்பேன் என உறுதி அளித்தார்.