தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நேற்று(மார்ச்.18)காலை 10 மணியளவில் தொடங்குகியது. இதில், தமிழ்நாடு அரசின் 2022 – 23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திருக்குறளை மேற்கோள் காட்டி தாக்கல் செய்தார்.
இத்திட்டம் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க , அரசுப் பள்ளி மாணவியர், கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் கூறியிருந்தார்.
இந்நிலையில், மாணவிகளுக்கு ரூ.1000 தருவதன் மூலம்,தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவிகளுக்கு ரூ.1000 தருவதன் மூலம்,தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம். அதேபோல், அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு தங்கம் சரியாக வழங்கப்படவில்லை.
திட்டத்துக்காக வாங்கிய தங்கத்தை என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், தடுப்பூசி இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி இன்று 25-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டில் 12 முதல் 14 வயது உடையவர்களுக்கு 3.61 லட்சம் பேருக்கும், 15 முதல் 18 வயது உடையவர்களுக்கு 28.25 லட்சம் பேருக்கும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
Discussion about this post