வயநாடு நிலச்சரிவு..! பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு..! நிதிஉதவி அளித்த நடிகர் விக்ரம்..?
கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமணையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றன.
இன்னும் இதில் சிக்கி கொண்டவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் இந்த நிலச்சரிவில தமிழகத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
உதவிகரம் நீட்டிய விக்ரம்:
இந்த நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு சார்பில் 5 கோடி நிதி உதவி கேரள அரசுக்கு வழங்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது நடிகர் விக்ரம் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக 20 லட்சம் வழங்கியுள்ளார்.
மலையாளம் போன்ற பிற மொழி திரை பிரபலங்கள் மௌனம் காக்கும் நிலையில் நடிகர் விக்ரம் முன்வந்து நிதி உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்