“வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்” இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, 2011-ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும், ஜனவரி, 25ம் தேதி, தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, 15வது தேசிய வாக்காளர் தினமானது, “வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இன்று (25.01.2025), சென்னை, கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அரசு தலைமை செயலாளர் முருகானந்தம், மாநிலத் தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., (ஓய்வு) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அவர்களின் தேசிய வாக்காளர் தினம் குறித்த உரை காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், தேர்தல் கல்வியறிவு குழு தொடர்பான புதுப்பிக்கப்பட்ட புத்தகப்பதிப்பு வெளியிடப்பட்டது.
மேலும், சிறப்பாக பணியாற்றிய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான சுவரொட்டி வடிவமைப்பு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா போட்டி போன்றவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..