ஜார்கண்ட் மாநிலத்தின் வாக்கு பதிவு…!! 1 மணி நிலவரம்…!!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்ட வாக்குப்பதிவும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) ஆகியவை உள்ளடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மகாராஷ்டிராவில் 9 கோடியே 70லட்சத்து 25 ஆயிரத்து 119 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 48.67% விகிதம் பேர் வாக்களித்துள்ளதாகவும் ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று 38 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு ஒரு கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில் 11.89% வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.