வைகோ அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்கள் கொண்டாட்டம்…!!
தர்மபுரி மாவட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டம்..
தர்மபுரி மாவட்ட மதிமுக மாவட்ட கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்களின் பிறந்தநாள் மற்றும் மதிமுக கட்சி 31 ஆம் ஆண்டு துவக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் ராமதாஸ் அவர்கள் தலைமையில் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.. இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
அதேபோல் கோவை மண்டல மாணவரணி சார்பாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கட்சியினர் கொண்டாட்டம். இதனை மதிமுக கழக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் கேக் வெட்டி விழாவை துவக்கி வைத்தார்.
முன்னதாக மதிமுக கட்சியின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டது.. இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்..
அதேபோல் கோவை மண்டல இளைஞர் அணி சார்பில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரத்தினசாமி தலைமையில் ரத்ததான முகாம் திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஞானாலயா வள்ளலார் கோட்டத்தில் அன்னதான நிகழ்ச்சி நெசவாளர் அணி மாநில செயலாளர் திருநாவுக்கரசு, திருப்பூர் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர், மாமன்ற உறுப்பினர் குமார் ஆகியோரது தலைமையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு திருப்பூர் மாநகரில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு நேரடியாகச் சென்று அன்னதானம் வழங்கினார்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..