மெரினா கடற்கரை சாலையில் கர்நாடகா மாநிலத்தை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாய அணி தலைவர் பி ஆர் பாண்டியனை கைது செய்த போது போலீஸாரால் தள்ளு ஏற்பட்டதால் படுகாயம் அடைந்தார்
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி ஆர்.பாண்டியன், பொதுச் செயலாளர் வி கே வி துரைசாமி,ஆகியோர் அமைதி முறையில் தேசியக் கொடி ஏந்தி இன்று காலை தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்ணா அமைதி போராட்டத்தில் ஈடுபடும் பொழுது
கர்நாடகாவின் காவிரி நீர் ஆணையை திறந்து விடக்கூடாது என கர்நாடகா மாநிலங்களில் பந்து போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய, மாநில, அரசுகளை வலியுறுத்தி வேண்டுமென தர்ணாவில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
மேலும் போலீசாரால் தள்ளுமுள்ளு நடத்தியதில் இடது கால் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக கூடங்களில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாகவும்குற்றம் சாட்டினார்.
பின்னர் விவசாய அணி தலைவர் பி ஆர் பாண்டியன் தற்போது மெரினா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படாமல் திருவல்லிக்கேணி வி என் வெங்கட்ரங்கம் சாலையில் உள்ள சமூக கூடத்தில் அடைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post