ஆஸ்திரேலிய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விராட் கோலி ட்வீட் செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே(52) மாரடைப்பு காரணமாக குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(மார்ச்.05) காலை காலமானார்.
இந்நிலையில், இவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கிரிக்கெட் வீரர் விராட்கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாழ்க்கை மிகவும் நிலையற்றது மற்றும் கணிக்க முடியாதது. எங்களின் இந்த சிறந்த விளையாட்டையும், களத்திற்கு வெளியே நான் அறிந்த ஒரு நபரையும் கடந்து சென்றதை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. ‘ என பதிவிட்டுள்ளார்.