வைரலாகும் லியோ ஃப்ர்ஸ்ட் லுக்.. தளபதி பிறந்த நாள் ஸ்பெசல்.
தளபதி விஜயின் 49 வது பிறந்த நாளான இன்று பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் பாடிய நா ரெடி பாடல் வெளியிடப்பட்டது. அதற்கான ப்ரோமோ இணையத்தில் வெளியிடப் பட்ட சில மணி நேரத்திலேயே மில்லியன் பார்வையாளர்கள் ஈர்த்தது.
லியோ படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடை பெற்று வருகிறது.. இன்னும் 20 நாட்களில் ஷூட்டிங் முடிந்து விடும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். லியோ படம் அக்டோபர் 19ம் தேதி வெளியிடப்படும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
இப்படம் திரையில் வெளியாவதற்கு பலரும் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் இந்நிலையில்,
தளபதி விஜயின் பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் விதமாக லியோ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியான சில நிமிடத்திலேயே இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.. இந்த பட போஸ்ட்டரை நடிகர் விஜய் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் போஸ்ட் செய்து இருப்பது ரசிகர்களுக்கு இன்னும் உற்சாகம் அளித்துள்ளது.
இந்த ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை பலரும் இன்று இன்ஸ்டாவில் ஸ்டோரி, போஸ்டர், பதிவிட்டு மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் நடிகை திரிஷா, சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குனர் கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், மேத்தியூ தாமஸ், ஜோஜு ஜார்ஜ் , மடோனா செபாஸ்டியன் என ஒரு நடிகர் பட்டாளேம் இருக்கும் இத் திரைப்படம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.