விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக பிரமாண்ட வெற்றி..! டெபாசிட் இழந்த அந்த கட்சி..?
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த மாவட்டத்திற்கு இந்த மாதம் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுது.
இன்று காலை 7 மணிமுதல் வாக்கு எண்ணப்பட்டது.. 20 சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 1,23,095 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார்.
பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56,030 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,009 வாக்குகள் பெற்றுள்ளார்.
விக்கிரவாண்டியில் 20 சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்த நிலையில் 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மகத்தான வெற்றி பெற்றுள்ளார்..
விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ