சீமானுக்கு விஜய் கொடுத்த பதிலடி..! 117..?
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிக்கருமான இளைய தளபதி விஜய்-யை சந்தித்து பேசியுள்ளார். தற்போது அந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கு முன்னும் இருவரும் நீலாங்கரையில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் கசிந்தது.
இரண்டாவது முறையாக இவர்கள் சந்தித்து அரசியல் குறித்து பேசி இருப்பதும்.., லோக்சபா தேர்தலுக்கு முன்னரே இவர்கள் சந்தித்து பேசி இருப்பது பற்றியும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடங்கி போன சீமான் :
சீமானுக்கு எப்போதுமே நடிகர் விஜய் மீது ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. அதாவது சினிமா நடிகர்களே நாட்டை இனி ஆளக்கூடாது என முஷ்டியை முறுக்கும் சீமான், விஜய் அரசியலுக்கு வரப் போகிறார் என்றதும் பொட்டிப் பாம்பாகச் சுருண்டு படுத்துக் கொண்டார்.
அதற்குக் காரணம், விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்குவதாகத் திட்டம் இருந்தார். அதற்காகக் கதை எழுதப்பட்டு ஒரு பெரிய பட்டாளமே செயல்பட்டு வந்துள்ளது.
அதற்காக நடிகர் சங்கதிற்கு பக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இயக்குனர் தாணு சீமானுக்கு என்று ஒரு தனி ரூம் போட்டுக் கொடுத்து அவரது குழுவினருடன் ஆலோசித்து வந்துள்ளனர்.
தினமும் மதியம் 20 பேருக்குச் சாப்பாடுக் கட்டிக் கொடுத்துவிட்டு, சீமான் டீம் செய்யும் வேலை எல்லாம் பார்த்து தாணு ஒரு பட்ஜெட்டும் கொடுக்க முன் வந்துள்ளார்.
பகலவன் :
அந்தப் படத்திற்கு ‘பகலவன்’ என்று கூட டைட்டில் வைக்கப்பட்டது. எப்படியாவது விஜய்யிடம் கால்ஷீட் வாங்கிவிட வேண்டும். படத்தை இயக்கிவிட வேண்டும் என்பதற்காகச் சீமான் போராடினார்.
விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும் போது கூடவே அது சர்ச்சைகளையும் இழுத்துக் கொண்டு வரும். சர்க்காரில் பிரச்சினை. தெறிக்குப் பிரச்சனை, கத்திக்குப் பிச்சனை. அதற்கு முன் தலைவா பிரச்சனை.
இப்படி எந்தப் படமாக இருந்தாலும் அதற்குக் கூடவே பிரச்சினை மணியும் அடித்து கொண்டேதான் வரும்.
அப்படிப் பிரச்சினை வந்த போது எல்லாம் முதல் ஆளாக குரல் கொடுத்தவர் சீமான்.
அதற்குக் காரணம் கால்ஷீட். ‘பகலவன்’ எப்படியாவது படமாக்கி விட வேண்டும் என்று நம்பிக்கையில் இருந்துள்ளார்.
அதற்காக இந்த படம் குறித்த அப்டேட்கள் கொடுக்கவில்லை என்றாலும்.., “என் தம்பி விஜய்” என்று கூறியுள்ளார்.
இறுதியாக “ஒரு தமிழன் இந்த நாட்டை ஆளட்டுமே” என்று விஜய்க்காகத் தனது முதல்வர் நாற்காலி கனவைக் கூட விட்டுக் கொடுத்தார்.
விஜய் பதிலடி :
ஆனால், நடிகர் விஜய் கடைசிவரை இதுகுறித்து அவர் காது கொடுத்து கேட்கவும் இல்லை. கால்ஷீட்டும் கொடுக்கவில்லை.
தன்னை ஆதரித்ததற்காக அவ்வப்போது நன்றி சொல்லி போன் செய்ததோடு சரி.
இப்போது தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பித்த பிறகு அவர் சீமானுடன் அடிக்கடி பேசுவதாகச் சொல்லப்படுகிறது.
விஜய் – சீமான் சந்திப்பு :
இந்நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சந்தித்துப் பேசி உள்ளனர்.
அதனை அடுத்துக் கடந்த சில நாள்கள் முன்னதாக இந்த இருவரும் மீண்டும் சந்தித்திருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.
இந்தச் சந்திப்பில் இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பற்றிய விசயங்களை விவாதித்ததாகச் சொல்லப்படுகிறது. அதையும் வாராகிதான் வெளிப்படுத்தி உள்ளார்.
அதாவது மொத்தம் 234 தொகுதிகளை ஆளுக்குப் பாதி பாதியாகப் பிரித்துக் கொள்வதாகத் திட்டம். அதாவது ஆளுக்குச் சராசரியாக 117 தொகுதிகள்.
யார் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறுகிறார்களோ அவர் தான் முதல்வர். குறைவாக எடுப்பவர் துணை முதல்வர் என முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது..