விஜய்யின் மாஸ்டர் பிளான்..!! அடுத்த மாநாடு..? உற்சாகத்தில் தவெக..!!
கடந்த பிப்ரவரி 2ம் தேதி 2024ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்தார்..
கட்சியை அறிவித்த பின்னர் மார்ச் 11ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான அறிக்கை,
அதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி தனது கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார்., அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் கட்சிப் பாடல் வெளியானது.,
இதற்கிடையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்குவது., பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மாவட்ட ரீதியாக அழைத்து கல்வி விருதும்., ஊக்க தொகையும் வழங்கினார்..
கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது..
தன்னுடைய முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ளதால் தலைவர் அடுத்த மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளார்..
அதாவது மாநிலம் முழுவதும் தன்னுடைய முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அதேபோல் மாவட்டம் முதல் கிளை வரை நிர்வாகிகளை நியமனம் செய்ய அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் விஜய்யின் சுற்றுப்பயணம் தொடங்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.. இது தவெகவினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..
அதேபோல் விக்கிரவாண்டியை போல நெல்லையிலும் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. இது தவெக நிர்வாகிளிடம் மட்டுமின்றி நெல்லை மக்களிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது…