பாக்ஸ் ஆஃபிசை அதிர வைத்த விஜய் ..!! தளபதி 69 அடுத்த அப்டேட்..!! குஷியான ரசிகர்கள்..!!
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் தற்போது பாக்ஸ் ஆஃபிசையே அதிர வைத்து வருகிறார். ஒரு பின்னனி பாடகரான இவர் இதுவரை 32 பாடல்களை பாடியுள்ளார்.இவர் தமிழில் 67 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் கோட் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
சினிமாவிலிருந்து விலகும் விஜய் :
விஜய், தற்போது அரசியலில் களமிறங்கவுள்ளதால் சினிமாவை விட்டு விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார். இதனால் தளபதி 69 தான் அவருக்கு கடைசி படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது..
எனவே விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்கப்போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில், தளபதி 69 படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தின் கதை அரசியலை மையப்படுத்தி உருவாக உள்ளது என இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 69ல் இணையும் சூர்யா பட நாயகி :
தமிழ், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து கொண்டிருபவர் நடிகை “அபர்ணா பாலமுரளி” இவர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் தளபதி 69 திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்ட்டரில் நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விஜய்-யின் பிறந்த நாள் முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– பவானி கார்த்திக்