சனாதனம் என்பது சட்ட விரோதமாக நடப்பது. சனாதனம் மனித தன்மைக்கு விரோதமானது- கி. வீரமணி
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து திக,திமுக , விசிக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசியதாவது:
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டம் மிகவும் பொறுத்தமான ஒன்று. மலர்களை எல்லாம் ஒன்றாக்கிய நார் தான் நான். 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த கூட்டணி, இன்றைக்கும், நாளைக்கும், என்றைக்கும் கூட்டணி எத்தனை கலகம் வந்தாலும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். உதயநிநியின் பேச்சு மூலம் வாரிசாக மட்டும் அல்ல கொள்கை வாரிசுகள் என்று வெளிகாட்டப்பட்டுள்ளது. இந்த களம் போராட்ட களத்திற்கான ஆயத்த பாசறையாக பார்க்கிறேன்.
மோடியை யூஸ் & த்ரோ என்பது போல பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் தூக்கி எரிவார்கள். விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு ஊக்கத்தொகை வழங்குவது மயக்க பிஸ்கட் வழங்குவது போல.பெண்களை கொச்சை படுத்தும் பிறவி பேதம் பார்க்கின்றனர். பொது எதிரியை வீழ்த்த ஒன்றினைகிறோம். பாஜக வை எதிர்க்க அனைத்து கட்சியினருமே கருப்பு சட்டை தைத்து வைத்துள்ளனர். அடுத்தடுத்து கன்னி வெடி வைப்பது போல திட்டம் கொண்டு வருகின்றனர். சனாதனம் மனித தன்மைக்கு விரோதமானது.
இந்தியாவிற்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக தமிழக அமைச்சர்கள், கொள்கையாளர்கள் உள்ளனர். புரிய வைக்க வேண்டியவர்களுக்கும், தெளிய வைக்க வேண்டியவர்களுக்கும் தெளிய வைப்போம். ஆர்எஸ்எஸ் காலத்திற்கு முடிவு கட்டுவோம்.
வீடு வீடாக சென்று தின்னை பிரச்சாரம் செய்ய வேண்டும், நாடு வெல்லும், திராவிட மாடல் வெல்லும் என தெரிவித்தார்.