கங்குவாவுடன் மோதும் வேட்டையன்… ரிலீஸ் தேதி வெளியீடு…!
தமிழ் திரையுலகில் முன்னனி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். நூற்றுக்கும் மேற்பட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஃபகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அணைத்து நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றம் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர் பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்தநிலையில் படத்தின் ரிலீஸ் தொடர்பாக புதிய அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.
ரிலீஸ் தேதி:
அதன்படி வரும் அக்டோபர் 10 ரிலீசாக உள்ளதாக படகுழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
கங்குவாவுடன் மோதும் வேட்டையன்:
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் அக்டோபர் மாதம் 10 தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வேட்டையன் திரைப்படமும் அதே தேதியில் ரிலீசாக உள்ளது.
-பவானி கார்த்திக்