மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் நிர்மலா சீதாராமன் செங்கோல் பற்றிய விளக்கத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் முதலில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை அழைக்கட்டும், அவர்கள் வரவில்லை என கூறிய பின்பு எங்களது முடிவை அறிவிப்போம் எனக்கூறிய திருமாவளவன், செங்கோல் என்பது மதசார்பற்றது. செங்கோலில் நந்தி சிலை உள்ளது. இது மத சின்னமாக கருதப்படுவதாலும், மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் பாஜவை எதிர்கின்றோம் என்றார்.
மரக்காணம், தஞ்சை மது மரணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த திருமா, விசிக மது விலக்கு கொள்கையை ஆதரிக்கிறோம். இதில் மாநிலங்கள் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஜூன் 15ம் தேதிக்கு பின் தமிழகம் தழுவிய போராட்டம் விசிக சார்பில் நடைபெறும்.
திமுக தேர்தல் அறிக்கையில் மது ஒழிப்பு பற்றி கூறியுள்ளது. அதனை செயல்படுத்த வேண்டும் எனக்கூறினார். விசிக பொறுத்தவரை பூரண மதுவிலக்க கொண்டுவர வேண்டும். 2024ல் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தூக்கியெறிய வேண்டும்.
கர்நாடாகவில் பாஜக தோற்க இந்துதளே காரணம் .வெறுப்பு அரசியலில் பாஜக அனைத்து கட்சி களும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். அதிமுக மதுவிலக்கு கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் பிரச்சினையில் அரசிற்கு எதிராக போராட வேண்டும் என்பது நோக்கமல்ல.
சில நேரங்களில் அரசின் கொள்கைக்கு எதிராக செயல்படும் சூழல் உள்ளது. தற்போதுள்ள நிலையில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில் விசிக தொடரும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் . திருமாவளவன் கூறினார்.
Discussion about this post