பாசிச ஆர்எஸ்எஸ் கட்சி சாவர்கர் பிறந்த தினம் அதனை கொண்டாடும் விதமாக மே 28ம் தேதி அன்று நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு திட்டமிட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு தலைவர் துணைத் தலைவர் இருவரையும் புறக்கணித்திருப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது என பகீர் குற்றச்சாட்டியுள்ளார்.
இது ஜனநாயகத்தை கொச்சைபடுத்தும் செயல் என்பதால் தான் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 18 கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்துள்ளதாகவும், மே 28ம் தேதியை கருப்புதினமாக அனுசரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் அன்று கருப்பு சட்டையணிந்து கருப்பு கொடி ஏற்றப்படும் என்றும் அறிவித்தார்.
ஹிட்லரை கொள்கை தலைவராக கொண்ட பாசிச ஆர்எஸ்எஸ் கட்சி சாவர்கர் பிறந்த தினம் அதனை கொண்டாடும் விதமாக மே 28 ல் திறக்கின்றனர். ஆந்திரா தலைமை செயலகம் சட்டிஸ்கர் தலைமை செயலகம் முதல்வர் திறந்தனர். அதேபோல் புதிய பாராளுமன்றத்தை பிரதமர் திறப்பதில தவறு இல்லை என நிர்மலா சீத்தாராமன் கூறியது. தலைமை செயலகம் வேறு , சட்டமியற்றும் அவையான பாராளுமன்றத்தை ஜனாதிபதியை கொண்டு திறக்க வேண்டும் என்றும் கூறினார்.
Discussion about this post